சென்னையிலிருந்து கேரளா நோக்கி ரப்பர் லோடு ஏற்றியவாறு லாரி ஒன்று, குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில், மாலி சிவசக்தி நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. லாரியை ஆத்தூரை சேர்ந்த சுரேஷ் ஓட்டிச் சென்றார். இதன் பின்னால் பிளாட்களுக்கு வேலி அமைக்கும் 8 அடி உயரம் கொண்ட கற்கள் லோடு ஏற்றியவாறு, சங்ககிரியிலிருந்து நசியனூர் நோக்கி சரக்கு வாகனம் ஒன்றும் சென்று கொண்டிருந்தது. சரக்கு வாகனத்தை நசியனூரை சேர்ந்த இளவரசன் என்பவர் ஓட்டிச்சென்றார். வாகனத்தில் வேலி கற்கள் மீது நசியனூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் என்பவர் அமர்ந்து சென்றுள்ளார். இந்நிலையில் முன்னாள் சென்ற லாரி ஓட்டுனர் திடீரென்று ப்ரேக் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் சரக்கு வாகனம் லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் சரக்கு வாகனத்தின் முன் பகுதி முழுதும் சேதமானது. பின்னால் கற்களின் மீது அமர்ந்து வந்த தொழிலாளி குமார் கால்கள் மீது, கற்கள் சரிந்து விழுந்ததில், இரு கால்களும் பலத்த சேதமானது. காயமடைந்த குமாார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
குமாரபாளையம் அருகே வாகன விபத்து – கற்கள் பாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி படுகாயம்
RELATED ARTICLES