ராசிபுரம் , பிள்ளாநல்லூர், அத்தனூர் , பட்டணம், ஆர்.புதுப்பட்டி ஆகிய பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ராசிபுரம் வட்டம், பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி, அத்தனூர் பேரூராட்சியில் ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, பிள்ளாநல்லூர் பேரூராட்சி, வார்டு எண் – 15, கிழக்கு தெருவில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள மொத்த குடியிருப்புகள் மற்றும் மக்கள் தொகை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பிள்ளாநல்லூர் பேரூராட்சி குப்பை கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கிடங்கில் தினசரி சேகாரமாகும் மொத்த குப்பைகள் விபரம், குப்பைகளை தரம் பிரிந்து சுத்திகரிக்குமாறும், மறுசுழற்சி செய்யப்படும் பொருட்கள் விபரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ராசிபுரம் நகராட்சி, சந்திரசேகரபுரம், தெற்குபட்டியில் செயல்பட்டு வரும் முதல்வர் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மருந்துகளின் இருப்பு, விற்பனை விபரம் குறித்து பணியாளரிடம் கேட்டறிந்தார். மேலும், ராசிபுரம் நகராட்சியில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக வாரச்சந்தை கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு சந்தையில் ஒதுக்கீடு செய்யபட உள்ள மொத்த கடைகள், கடைகள் அளவீடு உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்.