நாமக்கல் கோஸ்டல் இளங்கோ ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் கல்லூரியில் முதல் முறையாக 85 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் அக்கல்வி நிறுவனத்தின் முதல்வர் பூபாலன் வரவேற்றார். கோஸ்டல் கல்லூரி தலைவர் இளங்கோ, நிர்வாக இயக்குநர் அருண் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார், மக்களவை உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், கோஸ்டல் கேட்டரிங் கல்லூரி நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்று 2018 முதல் 2023 வரையில் இந்த கல்வி நிறுவனத்தில் உணவக மேலாண்மை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு பயின்றவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினர். இந்த நிகழ்வில், கோஸ்டல் இளங்கோ கல்வி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்
நாமக்கல் கோஸ்டல் இளங்கோ ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா! -எம்பிக்கள் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
RELATED ARTICLES