நாமக்கல் மாவட்டம், வெப்படை அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் முத்துசாமி என்பவர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரின் கடை முழுமையாக எரிந்து சேதமடைந்தது. சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.
தகவல் அறிந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் நேரில் சென்று தீ விபத்து பகுதிகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட முத்துசாமிக்கு ஆறுதல் கூறினார்.
பேரமைப்பின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், துணை தலைவர் தேவி உதயகுமார், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ராயல் பத்மநாபன், துணை அமைப்பாளர் எவரெஸ்ட் ராஜா, மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.