Friday, March 14, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeதகவல்கள்ராசிபுரத்தில் ஏப்.6-ல் மாராத்தன் ஒட்டம்

ராசிபுரத்தில் ஏப்.6-ல் மாராத்தன் ஒட்டம்

நாமக்கல் மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியும், மாவட்ட தடகள சங்கமும் இணைத்து சர்வதேச விளையாட்டு தினத்தை தொடர்ந்து ஏப்.6-ல் உடல் திறன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் -2025 ஒட்டத்தை ராசிபுரத்தில் நடத்துகிறது.

ராசிபுரம் சுஜிதா திருமண மண்டபம் முன்பாக உடல் திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் இந்த மாரத்தான் ஒட்டத்தை கட்சியின் பொதுச்செயலர் இ.ஆர்.ஈஸ்வரன் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இதில் நாமக்கல் எம்பி., வி.எஸ்.மாதேஸ்வரன், முன்னாள் எம்பி., ஏ.கே.பி.சின்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 74183 11646 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கொ.ம.தே.க., மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். போட்டியில் வெற்றி பெறும்பவர்களுக்கு சான்றிதழ், மெடல், ரொக்கப்பரிசுகள் உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!