மேக்னம் தொண்டு நிறுவனம். சார்பில் பெண் தொழில் முனைவோர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா ராசிபுரத்தில் நடைபெற்றது

இதில் மேக்னம் தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குனர் எஸ்.சத்யதாஸ் வரவேற்றுப் பேசினார், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் ஜி. மகாராஜன் ,துணை மண்டல மேலாளர் எம்.பாரதி, தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர், கவிஞர்.குரு நாகலிங்கம், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தலைமை வகித்த ஜி. மகாராஜன் பேசும் போது நிதி மேலாண்மை குறித்தும், நிதியை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்தும் விரிவாகவும் அதன் செயல் விளக்கத்தையும் பெண்களிடத்தில் எடுத்துக் கூறினார்.

இதேபோல் தொடர்ந்து பெண் தொழில் முனைவோரின் சவால்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் கிராம வங்கி துணை மண்டல மேலாளர் பாரதி இன்றைய சூழலில் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்களும் பிரச்சனைகளும் குறித்து பேசினார், கவிஞர்.குரு.நாகலிங்கம், 2026 மகளிர் தினத்திற்குள் இலக்கினை எவ்வாறு முடிவு செய்வது அதை எவ்வாறு அடைவது என்பது குறித்த ஐந்து தீர்மானங்களை மகளிர் இடத்தில் முன் முன்மொழிந்தார்,
தொடர்ந்து மேக்னம் நிறுவனத்தின் சிகரம் தொடுவோம் விருது பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது,
மேலும் மாணவர்களுக்கு கல்வி உதவி,நோட்டு புத்தகங்கள், எழுத பொருட்கள், ஸ்கூல் பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இறுதியாக கிட்ட ஒருங்கிணைப்பாளர் என் .லீலாவதி, நன்றி நா கூறினார்.
இதில் 150க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இதில் மகளிர் அனைவரும் மகளிர் தின உறுதி மொழியும் ஏற்றுக்கொண்டனர்.