மது ஒழிப்பு மாவட்ட மாநாடு மே.25-ல் நாமக்கல் பொம்மைக்குட்டை மேட்டில் நடத்த முடிவு
விடுதலை களம் கட்சியின் மகளிரணி சார்பில் உலக மகளிர் தினவிழா நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் விடுதலை களம் கட்சியின் மகளிரணி பொறுப்பாளர் வழக்கறிஞர் ப.ரம்யா தலைமை வகித்தார். மகளிர் அணி மாவட்டப் பொறுப்பாளர் ஜெயந்தி வரவேற்றுப் பேசினார். மாவட்ட அமைப்பாளர் வசந்தாமணி, மருத்துவர் ஜெயஷீலா, பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன் இதில் கலந்து கொண்டு கல்வியிலும், பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த பெண்களை பாராட்டி கெளரவித்து நினைவு பரிசளித்தார். நிகழ்ச்சியில், ஜெயபிரதா, ஜீவா, சகுந்தலா, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் சந்திரா சிவக்குமார், சந்தியா, நித்யா, ராஜேஸ்வரி, வித்யா, தாமரைக்கொடி, கோமதி, பிரபாவதி, செளதர்யா, விஜியா, பழனியம்மாள் உள்ளிட்ட மகளிரணியினர் கலந்து கொண்டனர். விழாவில் மாநில பொறுப்பாளர் பூவரசி ராஜேந்திரன், ராசிபுரம் சரவணன், பெரியூர் பூபதி, ராசிபுரம் மோகன், பட்டறை சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பொதுமக்களை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை அரசு முழுமையாக மூட வேண்டும். இக்கோரிக்கை வலியுறுத்தி மே மாதம் 25-ம் தேதி பெண்களை திரட்டி நாமக்கல் மாவட்ட மாநாட்டை பொம்மைக்குட்டைமேட்டில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் பிரியங்காசெல்வராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.