Wednesday, March 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்மாணவரை தாக்கிய சக மாணவர் கைதுசெய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைப்பு

மாணவரை தாக்கிய சக மாணவர் கைதுசெய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைப்பு

ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் கவின்ராஜ் (14) என்ற மாணவர் உயிரிழந்த நிலையில், அவரை தாக்கிய மற்றொரு மாணவர் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டார்.

ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு பள்ளியில் படித்து வரும், 9ம் வகுப்பு மாணவர் கவின்ராஜ், (14 ) புதன்கிழமை பள்ளி வளாகத்தில் கழிவறையில் சக மாணவரால் தாக்குதலுக்கு உள்ளாகி கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து அதே பள்ளியை சேர்ந்த சக மாணவர் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டார். த கராறு நடந்ததையும், அவரை தாக்கியதையும் மாணவர் ஒப்புக்கொண்டார். இதனிடையை பள்ளியில் கல்வித்துறை இணை இயக்குனர் முருகன் நேரில் சென்று ஆசிரியர்கள், மாணவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இந்த சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தியுள்ளார். இதனிடையே நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீண்ட போராட்டத்துக்கு பின் உயிரிழந்த மாணவர் சடலத்தை பெற்றுக்கொண்ட உறவினர்கள் ராசிபுரம் கொண்டு வந்து ஊர்வலமாக சென்று இறுதி அஞ்சலி செலுத்திய பின் எரியூட்டினர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!