நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள புதுப்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மாசானத்தாய் திருக்கோவில் மகா சிவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரியின் மயான கொள்ளை வியாழக்கிழமை நடைபெறும் நிலையில் இதனை தொடர்ந்து பழம் படைக்கும் நிகழ்வானது நடைபெற்றது.

இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழங்கள், எடுத்து நடனம் ஆடிபடியே ஆர்.புதுப்பாளையம் பகுதியில் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலமானது மாதா கோவிலில் இருந்து தொடங்கி சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊரை சுற்றி வந்து இறுதியாக கோவிலை சென்றடைந்தனர்.பக்தர்கள் கொண்டு வந்த பழம் வைத்து அம்மனுக்கு வெகு விமர்சையாக பூஜைகள் செய்து தீபாதாரணை காண்பிக்கப்பட்டது. பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.