Friday, March 14, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரம் நகரில் மாமூல் பிரச்சினை: திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் வெளிச்சத்துக்கு வந்த சந்து கடை -...

ராசிபுரம் நகரில் மாமூல் பிரச்சினை: திமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் வெளிச்சத்துக்கு வந்த சந்து கடை – லாட்டரி சீட்டு விற்பனை விவகாரம்

ராசிபுரம் நகரில் சந்து கடை, லாட்டரி சீட் விற்பனை போன்றவற்றில் மாமூல் பிரச்சினையால் திமுகவினர், அதே கட்சியை சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் இடையே முட்டல் மோதல்கள் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் நகரில் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் சந்து கடைகளும், லாட்டரி விற்பனையும், சுற்றுவட்டார பகுதியில் கனிமவள சுரண்டல்களும் தாராளமாக நடந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. குறிப்பாக காவல்துறை உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் இது தெரியாதது ஒன்றும் அல்ல. பொதுவெளியில் பலரது கண் எதிரே தான் இது நடந்து வருகிறது.

அனுமதிக்கப்பட்ட பார் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலை, இரவு நேரங்களில் சந்து கடை என்பதும், லாட்டரி விற்பனை என்பதும் பிரதான சாலையில் அலுவலகம் வைத்தே தாராளமாக நடந்து வருகிறது. நகரில் பல டீக்கடைகளிலும் லாட்டரி நம்பர் விற்பனை நடந்து வருவதை கண்கூடாக பார்க்க முடியும்.

கேரளா, நாகலாந்து போன்ற லாட்டரி சீட்டுகளின் நம்பர்களை பயன்படுத்தி ஜோராக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வருகிறது. இதில் ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் இதற்கு அடிமையாகி பணத்திற்கு ஆசைப்பட்டு நாள்தோறும் சம்பாதித்த பணத்தை இழந்து வருகின்றனர்.

இதனை நடத்தி வரும் லாட்டரி வியாபாரிகளும், டாஸ்மாக் நடத்துபவர்களும் ஏழைகளிடம் சுரண்டிய பணங்களை குவித்து வருகின்றனர்.

இந்த வருமானத்தில் ஆளும் கட்சியினர், காவல்துறையினர், பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் நடத்தி வருவோர் உள்ளிட்ட அனைவருக்கும் மாதந்தோறும் பங்குத்தொகை பிரித்து வழங்குவதும் அனைவரும் அறிந்தது. இதனாலேயே தாராளமாக சந்து கடைகளும் லாட்டரி விற்பனையும் வெட்ட வெளிச்சமாக ராசிபுரம் பகுதியில் நடந்து வருகிறது.

அரசுக்கு தெரிந்தே சட்டத்துக்கு புறம்பாக கள்ளத்தனமாக நடந்து வரும் இந்த தொழில் வருமானத்தில் காவல்துறை உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலரும் மாதந்தோறும் டாஸ்மாக் பார் நடத்தி வரும் கட்சிக்காரர்களிடமும், லாட்டரி வியாபாரிகளிடமும் மாமுல் பெருகின்றனர்.

மாமுல் கேட்டு பலரும் படை எடுப்பு:

இந்த தொழில் செய்து வருபவர்களிடம் புதிது புதிதாக பலரும் மாமுல் கேட்டு தொந்தரவு செய்வதால் அவர்களுக்குள் பிரச்சனைகள் ஏற்படுகிறது. பல்வேறு லெட்டர் பேடு கட்சிகள் என்ற பெயரிலும், சமூக ஊடகங்கள் என்ற பெயரிலும் புதிது புதிதாக பலரும் நாள்தோறும் மாமுல் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு இடையிலும் ஆளுங்கட்சியினர் அதிகாரிகள் ஆசியுடன் இந்த தொழில் நடந்து வருகிறது.

கட்சியினரிடையே மோதல்:

இந்நிலையில் ராசிபுரம் பஸ் நிலையம் பகுதியில் நடந்து வரும் டாஸ்மாக் பார் அலுவலகத்தில் லாட்டரி விற்பனையும் நடந்து வருகிறது.

இதனை திமுகவின் கட்சி நிர்வாகிகள் சிலர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே இந்த தொழில் ஈடுபட்டு வரும் அப்பகுதியைச் சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர் மற்றும் அவரது மகன்கள், தற்போது சந்து கடை நடத்தி வருபவர்களிடம், லாட்டரி சீட்டு நம்பர் விற்பனை செய்பவர்களிடம் மாதம்தோறும் மாமுல் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டாஸ்மாக் கடையில் சில தினங்களுக்கு முன்புnதகராறு செய்த ஒரு பிரிவினருக்கு ஆதரவாக திமுக நகர் மன்ற உறுப்பினரின் மகன் வாக்குவாதத்தை ஈடுபட்டாராம். மேலும் மருத்துவ செலவுக்கு ரூ.50 ஆயிரம் பணம் கேட்டும் மிரட்டினாராம். மேலும் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தொடர்பாக வீடியோ எடுத்தும் சமூக ஊடகங்களில் வெளியிட்டாராம். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

இதனால் நகர்மன்ற உறுப்பினர் மகனிடம் சென்று சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களே இப்படி செய்யலாமா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் காவலர் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதனை அடுத்து இரு தரப்பினரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் நகர் மன்ற உறுப்பினரின் மகன் மீண்டும் மருத்துவமனை வளாகத்திலேயே செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் முன்னிலையில் அங்குள்ளவர்களையும் தாக்கியுள்ளார். இதனால் கைகலப்பு அங்கும் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பிலும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் இருதரப்பிலும் வழக்கு பதிவு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் சந்து கடை லாட்டரி சீட்டு விற்பனை குறித்து திமுகவின் உடைய ஏற்பட்ட மோதல் போக்கால் சட்டவிரோத சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இனியாவது அரசும், காவல் துறையினரும் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!