Wednesday, March 12, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeமாவட்ட செய்திகள்நாமக்கல்காடச்சநல்லூர் பகுதியில் நாளிதழ் செய்தியாளர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் கட்டிப்போட்டு தாக்கி நகை கொள்ளை

காடச்சநல்லூர் பகுதியில் நாளிதழ் செய்தியாளர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் கட்டிப்போட்டு தாக்கி நகை கொள்ளை

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காடச்சநல்லூர் தாஜ்நகர் பகுதியில் உள்ள பிரபல நாளிதழ் செய்தியாளர் ரமேஷ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து நள்ளிரவில் புகுந்த யாருமில்லாத போது, கொளையில் ஈடுபட்டுள்ளனர். செய்தியாளர் வீடு திரும்பியதும் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரையும் கும்பல் கட்டிப்போட்டு கொலை மிரட்டல் விடுத்து 4 சவரன் நகைகளை கொள்ளையடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளருக்கு மனைவி, இரு மகன்களும், மகளும் உள்ளனர். இவரது மகன் காடச்சநல்லூர் தாஜ்நகர் பகுதியில் புதியதாக வீடு கட்டியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர் குடும்பத்துடன் தாஜ்நகர் பகுதியில் சில மாதங்களாக குடியிருந்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவு, மகள் ஆகியோர் வெளியூர் சென்றிருந்த நிலையில், இவர் பணி காரணமாக மல்லசமுத்திரம் சென்று விட்டு இரவு 12 மணயளவில் வீடு திரும்பியுள்ளார்.

இவரது வீடு தனித்து உள்ள நிலையில், வீட்டின் வெளியே இருவர் இருந்துள்ளார். வீட்டிற்கு சென்ற இவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டு உள்ளே சென்றவுடன், அங்கு மூவர் இருந்துள்ளனர். செய்தியாளரை மூவரும் தாக்கி நாறிகாலியில் கட்டி வைத்துள்ளனர். மேலும் அதிகாலை வரை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்து வீட்டில் இருந்து 4 சவரன் நகைகளை கொள்ளையடுத்து சென்றுள்ளனர். தனியாக இருந்த செய்தியாளர் வீட்டை உடைத்து அவரையும் தாக்கி நகைகளை கும்பல் கொள்ளையடுத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் ரமேஷ் மல்லசமுத்திரம் பகுதியில் பிரபல நாளிதழ் ஒன்றில் பல ஆண்டுகளாக செய்தியாளராக இருந்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!