நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் டாக்டர் ஆர்.சிவக்குமாருக்கு நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் இல்லத்தில் சிறந்த நூலக பராமரிப்பிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட பொது நூலகத் துறை ஆகியவற்றின் சார்பில் 10 நாள் புத்தகத்திருவிழா நாமக்கல்லில் நடைபெற்றது. மாணவர்களிடையே வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்புத்தகத்திருவிழாவில் பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் பங்கேற்றுப் நாள்தோறும் பேசினர். மேலும் பள்ளி மாணவர்களிடையே பல்வேறு திறன் வளர்ப்புப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. இல்லங்களில் நூலகம் வைத்து பராமரிப்போரை ஊக்குவிக்கும் வகையில் இல்லத்தின் நூலகங்களை ஆய்வு செய்து கெளரவிக்கத் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கலை அறிவியல் கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஆர்.சிவக்குமார், தமது இல்லத்தில் பல்வேறு தலைப்புகளிலான நூல்கள், ஆய்வு கட்டுரைகளை திறம்பட பராமரித்து இல்லத்தை சிறந்த நூலகமாக மாற்றிமைத்திருப்பதற்கும், புத்தகங்கள் மூலம் மாணவர்களின் போட்டித் தேர்வு பயன்பாட்டிற்கும் வழிகாட்டி வருவதையும் நேரில் ஆய்வு செய்து விருது வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் அரசு சார்பில் நடைபெற்ற புத்தக திருவிழாவின் நிறைவு நாளில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் Dr. ச.உமா, முனைவர் ஆர். சிவக்குமார் அவர்களை பாராட்டி நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். விழாவில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், பொது நூலகத்துறை அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.