மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருக்கு நாமக்கல் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் VS மாதேஸ்வரன் எம்பி., கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது, கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் மாவட்டத்தில் சுமார் 39,938 மக்கள் சாலை விபத்துகளில் சிக்கியுள்ளனர், அதில் சுமார் 8754 பேர் தீவிர சிகிச்சை பெற்றுள்ளனர், இங்கு நரம்பியல் சிகிச்சை பிரிவு இல்லாததால் உயர் சிகிச்சைக்காக சுமார் 60 கிமி தொலைவில் உள்ள சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது.
இதனால் அவசர சிகிச்சை பெற முடியாமல் பல நோயாளிகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது.
நோயாளிகள் உயிரை காக்கும் உன்னத நோக்கில் அனைத்து வசதிகளும் உள்ள நாமக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடணடியாக
நரம்பியல் சிகிச்சை பிரிவு துவங்க ஆவணம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்