ராசிபுரம் புறவழிச்சாலையில் பஸ் நிலையம் அமைக்கப்பட்டாலும், ராசிபுரம் பஸ் நிலையம் எப்போதும் போல் செயல்படும், வர்த்தகர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என உறுதிமொழி அளிப்பதாக கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., குறிப்பிட்டார். ராசிபுரம் பஸ் நிலையம் மாற்றுத்துக்கு பொதுமக்களிடம் ஆதரவு உள்ளது. எதிர்ப்பவர்கள் எதற்காக எதிர்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும் என்றும் பஸ் நிலையம் முன்பாக நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசினார். மேலும் பஸ் நிலையம் வெளியே எங்கோ கொண்டு செல்லவில்லை. புறவழிச்சாலைக்கு தான் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் புறவழிச்சாலை பஸ் நிலையம் செல்வதற்கு 2 கி.மீ. தொலைவிற்கு இணைப்பு சாலையும் அமைக்கப்படும் என்றார். தற்போதைய பஸ் நிலையம் நகரப் பேருந்து நிலைய பஸ் நிலையமாக தொண்டர்ந்து செயல்படும். யார் என்ன சொன்னாலும் நம்ப வேண்டாம். ஆட்சிக்கு வரும்போது என்ன சொன்னாமோ அனைத்தையும் நிறைவேற்றுவோம். மேலும் நகரின் வளர்ச்சிக்காக சாலை வசதி, ஏழைகளுக்கு பட்டா உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட டைடல் பார்க், நகரின் குடிநீர் தேவைக்காக புதிய கூட்டு குடிநீர் திட்டம், மோகனூரில் சிப்காட் என பல நல்ல தொழில் திட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன என்றார்.

ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் வசதிக்காக ரூ.854 கோடி மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடுநீர் திட்டம் கொண்டுவர பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் குடிநீர் பிரச்சனை என்பது முழுமையாக தீர்த்து வைக்கப்படும். கடந்த அதிமுக 10 ஆண்டு ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு தோண்டி சாலைகள் அப்படியே இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்து நகர்மன்றம் பொறுப்பேற்றவுடன் நகரில் 70 கி.மீ.தொலைவிற்கு 52 கோடி மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராசிபுரத்துக்கென தனியாக ரூ.57 கோடி மதிப்பில் மாவட்ட மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. போதமலை பகுதிக்கு எப்போது இல்லாத வகையில் ரூ.194 கோடியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நாமகிரிப்பேட்டை நாரைக்கிணறு பகுதியில் ஏறத்தாழ 1000 விவசாய பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.60 கோடி மதிப்பில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் இந்த கோரிக்கை குறித்து எந்த முயற்சியும் இல்லை. ராசிபுரம் நகரில் பிறபட்டோர் காலனி மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என ஏதையாவது குறிப்பிட்டு சொல்ல முடியுமா. கடந்த ஆட்சியி்ல் என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பினார்.
டைடல் பார்க்:
ராசிபுரம் பகுதியை தொழில் வளர்ச்சியை உருவாக்க எண்ணி தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியிலே விரைவில் டைடல் பார்க் கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான பணி தொடங்கும். பெண்களுக்கு விடியல் பஸ் பயணம், மகளிர் உரிமைத் தொகை, நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்கடன் தள்ளுபடிசெய்து மீண்டும் கடன், குழந்தைகளுக்கு காலை உதவித் திட்டம், அரசு கல்லூரியில் பயின்றால் புதுமைப்பெண் திட்டம் என பெண்களுக்கான அரசாக செயல்படுகிறது. திமுக சாதனையை முறிக்க வேண்டும் என்றால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து தான் முறியடிக்க முடியும் என்றார்.
கூட்டத்தில் கட்சியின் மாநில மாணவரணி துணைச் செயலர் இரா.தமிழரசன், தலைமைக்கழக பேச்சாளர் நெய்வேலி தங்கம், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம், நாமக்கல் மேயர் து.கலாநிதி, மாவட்டதிமுக பொருளாளர் ஏ.கே.பாலசந்திரன், மாநில மகளிர் தொண்டரணி செயலர் ப.ராணி, ஒன்றியச் செயலாளர்கள் கே.பி.ராமசாமி, ஆர்.எம்.துரைசாமி, ஜெகந்நாதன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரநிநிதிகள், கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர்.