ராசிபுரம் அருகே உள்ள தேங்கல்பாளையம் வித்யா நிகேதன் இன்டெல் பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 7 செஸ் அகாடமியைச் சார்ந்த 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை இறுதிவரை வெளிப்படுத்தினர்.
இப்போட்டி வயதுகளின் விகிதத்தில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் பள்ளியின் ஆங்கிலத்துறை ஆசிரியர் A. அபிராமி அவர்கள் வரவேற்புரை வழங்க, வித்யா நிகேதன் இண்டெல் பப்ளிக் பள்ளியின் முதல்வர் M. உமா முன்னிலை வகுத்து பேசினார்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் T. சித்ரா பங்கு பெற்று சிறப்புரை ஆற்றினார்.
அவ்வுரையில், “போட்டிகள், மாணவர்களின் தனித்திறமையை மேம்படுத்தும் என்றும், வாழ்வில் சிறந்த இடத்தைப் பெறுவதற்கு அவை உதவும்” என்றும் கூறினார்.
விழாவிற்கான வாழ்த்துரை வழங்கிய பள்ளியின் இயக்குனர் S. அப்துல் கரீம் அவர்கள் கூறுகையில்,
“இவ்வகையான விளையாட்டு மாணவர்களின் நேர மேலாண்மையை மேம்படுத்தும் எனவும், அவர்களின் தலைமைப் பண்பை மெருகேற்றும் காரணியாக மாறும்” எனவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் பத்து இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர் அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் பள்ளியின் இயக்குனர் எஸ். அப்துல் கரீம் அவர்களால் வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் , விழா இனிதே நிறைவடைய உதவிய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பள்ளியின் தலைவர் P. நடராஜன் அவர்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
பள்ளியின் அறிவியல்துறை ஆசிரியர் G. சத்யா நன்றியுரை வழங்க, தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.