நாமக்கல் மாவட்ட சசிகலா அணி அதிமுக சார்பில் எம்ஜிஆரின் பிறந்த தினம் ராசிபுரத்தில் கொண்டாடப்பட்டது. இதில் சசிகலா அணியின் மாவட்டப் பொறுப்பாளர் என்,கோபால் தலைமையில் கட்சியின் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சியினர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என். கோபால், நகர செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம் ஜி ஆர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து 2026-ல் கட்சியின் ஆட்சி அமைய பாடுபடுவோம் என முழக்கமிட்டனர். இந்த நிகழ்வில் வெண்ணந்தூர் ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் வேலுச்சாமி, ராசிபுரம் ஒன்றிய பொறுப்பாளர் ரித்தீஷ், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
காவல் நிலையத்தில் புகார்
சசிகலா அணியின் ப்ளக்ஸ் பேனர்கள் கிழித்தவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் பொறுப்பாளர்கள் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எம்ஜிஆர் 108-வது பிறந்த தினவிழா அதிமுக சசிகலா அணி சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் பிறந்தநாளை போற்றும் விதமாக பிளக்ஸ் பேனர், மற்றும் சுவரொட்டிகள் வைத்து விளம்பரங்கள் செய்திருந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என். கோபால் மற்றும் ராசிபுரம் ஒன்றிய பொறுப்பாளர் ஜெ.ரித்திஷ், மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகலூர் கேட் பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஆவின் பால் டீக்கடை நடத்தும் உரிமையாளர் எம்ஜிஆர் பிறந்த நாள் ஆன இன்று வைத்திருந்த பேனரை கிழித்து சாலையில் தள்ளியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அதிமுக நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என்.கோபால் தலைமையில் ராசிபுரம் காவல் நிலையத்தில் நிர்வாகிகள் பலர் நேரில் சென்று உதவி காவல் ஆய்வாளர் கீதாலட்சுமியிடம் இது குறித்து புகார் மனு அளித்தனர். இதில் ராசிபுரம் நகர செயலாளர் எஸ். வேலுச்சாமி, வழக்கறிஞர் ஒன்றிய பொறுப்பாளர் வேலுச்சாமி, மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தனர்.