ராசிபுரம் அருகே உள்ள ஆர். புதுப்பாளையம் ஜேவிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் டாக்டர். ச. உமா, கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். பள்ளியின் செயலாளர் அரிமா. P.காத்தமுத்து வரவேற்புரை வழங்கினார்.

இவ்விழாவிற்கு தலைமையேற்று பள்ளியின் தாளாளர் அரிமா.V. முத்துசாமி விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி பேசினார். தொடர்ந்து பள்ளியின் பொருளாளர் அரிமா.K. சிவமணி, இயக்குநர் V.செந்தில் குமார், இயக்குநர் M.நரேந்திரன் மற்றும் நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன், புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர், ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர் அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் முதல்வர் மதன் ரெங்கநாதன் நன்றி கூறினார்.