Wednesday, January 15, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்கொல்லிமலை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள 37.40 ஏக்கர் பரப்பு நிலத்தை மாமியார் பெயருக்கு...

கொல்லிமலை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள 37.40 ஏக்கர் பரப்பு நிலத்தை மாமியார் பெயருக்கு பட்டா போட்டு விவசாயம் பார்த்த பலே தாசில்தார்

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியில் வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் முதல் வட்டாட்சியர் வரை 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய கே.லோகநாதன் என்பவர், தனது பணி செல்வாக்கை பயன்படுத்தி வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு பகுதியின் 37.40 ஏக்கர் பரப்பு தரிசு புறம்போக்கு நிலத்தை தனது மாமியார் பெயரில் பட்டா போட்டு பல ஆண்டுகளாக அனுபவித்து வந்தது தற்போது தான் தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் நகரைச் சேர்ந்த காளிதாசன் என்பவர் மகன் கே.லோகநாதன். இவர் கடந்த 1.12.1987 முதல் 30.01.1991 வரை சர்வேயராகவும், 03.09.2004 முதல் 29.11.2204 வரை வாழவந்தி நாடு கிராமத்தில் வருவாய் ஆய்வாளராகவும், 30.11.2013 முதல் 31.06.201வரை வட்ட வழங்கல் அலுவலராகவும், 30.07.2016 முதல் 14.02.2017 வரை தலைமையிடத்து வட்டாட்சியராகவும், 19.07.2019 முதல் 13.07.2020 வரை மண்டல வட்டாட்சியராகவும் கொல்லிமலையில் பணியாற்றியுள்ளார். பின்னர் மாதந்தோறும் பல லட்சம் வருவாய் ஈட்டும் நாமக்கல் டாஸ்மாக் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணியாற்றி வந்த நிலையில், ஒய்வு பெற ஒரு சிலநாட்கள் இருந்த நிலையில் கடந்த ஆண்டு இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் நடந்துள்ளது.

மாமியார் பெருக்கு பட்டா போட்டு விவசாயம்:

இந்நிலையில் இவருக்கு கொல்லிமலை பகுதியில் வருவாய் ஆவணங்கள், வனத்துறை இடங்கள், புறம்போக்கு நிலங்கள் அத்துபடி என்பதால் பல ஆண்டுகளுக்கு முன்பே நில ஆவணங்கள் அப்டேட் (யூடிஆர்) செய்வதற்கு முன்பே 1981-ம் ஆண்டின் வருவாய்த்துறை ஆவணங்கள் படி வனத்துறைக்கு சொந்தமான கொல்லிமலை சேலூர் நாடு கிராமத்தில் எஸ்.எப்.,240 என்ற சர்வே எண் கொண்ட 37.40 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலத்தை புதிய சர்வே நெம்பர் 1031 என மாற்றம் செய்து, தனது மாமியார் மாராயம்மாள் பெயருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்றம் செய்துள்ளார். வருவாய்த்துறை ஆவணங்களில் போலியாக திருத்தம் செய்து தனது மாமியார் பெயருக்கு மோசடியாக இவர் மாற்றம் செய்துள்ளார். மேலும் அந்த நிலத்தில் பல ஆண்டுகளாக பாக்கு, காப்பி போன்ற பண பயி்ர்கள் பயிரிட்டு பல கோடிகள் ஆதாரம் ஈட்டி வந்துள்ளார். பின்னர் இந்த நிலத்தை தானசெட்டில்மென்படி தனது மாமியார் பெயரில் இருந்து தனது மகன்கள் எல்.திர்வந்த், எல்.வருண், மனைவி எல்.மகேஸ்வரி ஆகியோர் பெயருக்கு மாற்றம் செய்து பதிவு செய்துள்ளார். இதனை வருவாய்த்துறை சிட்டாவிலும் திருத்தம் செய்துள்ளார்.

கொல்லிமலை பகுதியில் பல ஆண்டுகளாக நில சர்வேயராக, வருவாய் ஆய்வாளராக, மண்டல வட்டாட்சியராக பணியாற்றி வந்த அவர் இதனை பயன்படுத்தி பல அதிகாரிகள் ஆதரவோடு அரசுக்கு சொந்தமான சுமார் 30 கோடி மதிப்புள்ள நிலத்தை பல ஆண்டு ஆண்டு அனுபவத்து வந்துள்ளார். இவர் இந்த நிலத்தை அதிகாரிகள் பலரது உதவியுடன் பெயர் மாற்றம் செய்து அனுபவித்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் இந்த தகவல் குறித்து விசாரித்து வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய்துறையில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக அவரை பணியில் வைத்திருந்ததே இது போன்ற முறைகேடுகளுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ள நிலயைில், இது போன்ற பல ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அலுவலர்களை அரசு கண்காணிக்க வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!