சேலம் ஸ்ரீ சாயி அம்ருதம் சேவா அறக்கட்டளை மற்றும் ராசிபுரம் AS கன்சல்டிங் சார்பில், தமிழர் திருநாள் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராசிபுரம் நெசவாளர் காலனியில் உள்ள சமுதாய மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகள் 60 நபர்களுடன் பொங்கல் வைத்து பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. நிகழ்வின் இறுதியில், ஸ்ரீ சாயி அம்ருதம் சேவா அறக்கட்டளை நிறுவனர் செந்தில், AS கன்சல்டிங் நிறுவனரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான சுந்தரம் ஆகியோர் பங்கேற்று மாற்றுத் திறனாளிகள் 60 பேருக்கு அரிசி, கரும்பு, வெல்லம்,இனிப்பு பொங்கல் சாதம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கினர்.





