ராசிபுரம் ரோட்டரி இன்னர்வீல் சங்கம் சார்பில் ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான ஆயத்த முகாமில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு அவர்களின் கல்வி தரம் மேம்பட ராசிபுரம் ரோட்டரி இன்னர் வீல் சங்கம் சார்பில் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள LED தொலைக்காட்சி வழங்கப்பட்டது. ராசிபுரம் இன்னர்வீல் சங்கத் தலைவர் சுதா மனோகரன், ராசிபுரம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் வி. ராஜசேகர் அவர்களிடம் இத்திட்ட ஸ்பான்சரும் 2982 ரோட்டரி மாவட்டம், மகிழ்ச்சிகள் பள்ளி தலைவருமான ரோட்டேரியன் கே .எஸ் கருணாகர பன்னீர்செல்வம், ராசிபுரம் ரோட்டரி சங்க மூத்த உறுப்பினர் வெங்கடாஜலபதி ஆகியோரின் முன்னிலையில் வழங்கினார்.
விழாவில் வட்டார வளமைய ஆசிரியர் ஜே. மல்லீஸ்வரி மற்றும் சிறப்பு பயிற்சி ஆசிரியர்கள் உதயகுமாரி ஸ்ரீதேவி,சுதா, இந்திராணி ,பிரேமா ஆகியோர் கலந்து கொண்டனர்.