Saturday, January 17, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்யோகாவில் உலக சாதனை நிகழ்த்திய 21 மாணவ மாணவியர்

யோகாவில் உலக சாதனை நிகழ்த்திய 21 மாணவ மாணவியர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் யோகாவில் 21 மாணவ மாணவியர்கள் உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர். குமாரபாளையம் அரவிந்த் யோகா மையம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைப்பாளர் அரவிந்த் தலைமை வகித்தார். அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலர் குமரேசன், முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் வெங்கடேசன் போட்டிகளை துவக்கி வைத்தனர். இதில் 21 மாணவ மாணவியர் யோகா உலக சாதனை செய்து அசத்தினர். இது குறித்து பயிற்சியாளர் அரவிந்த் கூறியதாவது:

நமது யோகா மையம் சார்பில் உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, நமது மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். தற்போது அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நோபிள் வோர்ல்ட் ரெகார்ட்ஸ் எனும் உலக சாதனை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்று அனைவரும் அசத்தியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. போட்டிக்காக மட்டும் நடத்தப்படும் நிகழ்ச்சி யோகா அல்ல. உடல் ஆரோக்கியத்திற்கும் யோகா ஒவ்வொருவர் வாழ்விலும் அவசியம் என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!