ராசிபுரம்: நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் P.தங்கமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னாள் அமைச்சர் டாக்டர் v.சரோஜா, மாவட்ட அதிமுக வர்த்தக பிரிவு செயலாளர் ராகா சு.தமிழ் மணி, திருச்செங்கோடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன் சரஸ்வதி, ராசிபுரம் நகர அதிமுக செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.