Friday, March 14, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஅரசியல்நாமக்கல் ஜே.சி.ஐ., துளிர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு - வி.எஸ். மாதேஸ்வரன் எம்பி., பங்கேற்பு.

நாமக்கல் ஜே.சி.ஐ., துளிர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு – வி.எஸ். மாதேஸ்வரன் எம்பி., பங்கேற்பு.

நாமக்கல் ஜே.சி.ஐ., துளிர் அமைப்பின் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள சரவணாஸ் ஓட்டலில் நடைபெற்றது. இந்த அமைப்பின் புதிய தலைவராக அபி சுரேஷ், செயலாளர் மல்லேஸ்வரன், பொருளாளர் வினோத்குமார் குழுவினருக்கு ஜேசிஐ நாமக்கல் துளிர் நிறுவனர் சௌ.சதிஷ், தேசிய பயிற்சியாளர் ஆடிட்டர் நாகராஜன், முன்னாள் தலைவர்கள் ஞானக்குமார், மாதேஸ்வரன், உடனடி முன்னாள் தலைவர் நவீன் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

விழாவில் உதவி தலைவர்களாக நவநீதன்,கோகுல், கார்த்திக், கிரிதரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் நிர்வாக இயக்குனராக செல்வக்குமார், பிரதீப், தவப்பிரகாஷ், ஜீவரத்தினம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்,. பின்னர் நாமக்கல்லை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் உஷாவுக்கு சீருடை வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை நாமக்கல் எம்பி., மாதேஸ்வரன் வழங்கினார். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பசுமையை வளர்க்கும் விதமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!