நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டம் தலைவர் R.வரதராஜ் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு டயர் ரீட்ரேடிங் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கே.ராஜ்குமார் கலந்து கொண்டார்.
செயலாளர் கே.ரவிச்சந்திரன், துணைத் தலைவர்கள், லோகசந்திரன், தர்மலிங்கம், துணை செயலாளர்கள் வெங்கடேஷ்,ஹரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் மல்லீஸ்வரன் வரவு/செலவு அறிக்கை வாசித்தார்
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நலிவடைந்து வரும் ரீட்ரேடிங் தொழிலுக்கு மின் கட்டண சலுகை கோரி விரைவில் மின்சாரத் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைப்பதென தீர்மானிக்கப்பட்டது.
டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் தொழிலை விரிவுபடுத்தும் வகையில் மத்திய அரசின் PMEGP (மானிய கடன் திட்டம்) பற்றி துறை சார்ந்தவர்கள் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது
மாநில சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடத்த மாநில தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது
பணியாளர்கள் இன்சூரன்ஸ் மற்றும் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது
ஆலோசனைக் கூட்டத்தில் திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.