Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்அமமுக சார்பில் டிடிவி தினகரன் பிறந்த தின விழா நல உதவிகள் வழங்கல்

அமமுக சார்பில் டிடிவி தினகரன் பிறந்த தின விழா நல உதவிகள் வழங்கல்

நாமக்கல் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த தினவிழா வை தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளர் ஏ.பி. பழனிவேல் தலைமை வகித்தார்.

முன்னதாக ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே புதிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து நாமக்கல் சாலை பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் சுவாமி கோவிலில் டிடிவி தினகரன், பெயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்து பிரார்த்தனை செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு அன்னதான வழங்கியும் நூற்றுக்கு மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் வழங்கியும் பிறந்த தினத்தை கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் எஸ். பன்னீர்செல்வம், மாவட்ட இணை செயலாளர் திலகம், மாவட்ட பொருளாளர் வழக்குரைஞர் அன்புச் செழியன், பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், ராசிபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் முருகேசன், பிள்ளாநல்லூர் பேரூராட்சி செயலாளர் ராஜா, ராசிபுரம் நகர செயலாளர்கள் ஆர்.டி. தர்மராஜ், பூபதி, பட்டணம் பேரூர் கழக செயலாளர் ரஞ்சித், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராசிபுரம் நகர வார்டு கழக நிர்வாகிகள் குமாரசாமி, விநாயகம் ,நடராஜ், ராசிபுரம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சதீஷ், 22 ஆவது வார்டு செயலாளர் செல்வம், மற்றும் திரளான கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!