பென்னாகரம் பேரூராட்சி போடூர் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன், தண்டு மாரியம்மன், கரக கோவில் அம்மன், முனியப்பன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பென்னாகரம் அருகே போடூர் பகுதியில் பழமை வாய்ந்த மாரியம்மன், தண்டு மாரியம்மன் , கரக கோவில் அம்மன், முனியப்பன் கோவில்கள் உள்ளது. இப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து புதிதாக கோவில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அந்தப் பணிகள் நிறைவுற்ற நிலையில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்வான முகூர்த்தங்கால் நடுதல் நிகழ்ச்சி திங்கள் கிழமை தொடங்கி, முளைப்பாரி இடுதல், கங்கணம் கட்டுதல், உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சாலை விநாயகர் கோயிலில் இருந்து தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த தீர்க்க கூட ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்த குடத்தினை எடுத்து பேருந்து நிலையம்,கடைவீதி,காவல் நிலையம் போடூர் நான்கு சாலை சந்திப்பு வழியாக கோயிலை வந்தடைந்தனர். இதனைத் தொடர்ந்து நவ.6- வெள்ளிக்கிழமை ஸ்ரீ அருள்மிகு மாரியம்மன், தண்டு மாரியம்மன், கரக கோவில் அம்மன், முனியப்பன் கோவில் கோபுரங்கள், மூலவருக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா,மகா தீபாராதனை நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் அதிபதி தலைமையில், ஊர் கவுண்டர் முருகன், கோம்பு கவுண்டர் துரை, பொன்னுசாமி ,கோம்பு மந்திரி கவுண்டர் கந்தசாமி, பூசாரி பவுனேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.