Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்நாமக்கல் கடையடைப்பிற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு :ஆலோசனை கூட்டத்தில் முடிவு

நாமக்கல் கடையடைப்பிற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு :ஆலோசனை கூட்டத்தில் முடிவு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரும் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வருகிற 25ம் தேதி திங்கட்கிழமை கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக பேரமைப்பின் இணைப்பு சங்கங்களுடனான முக்கிய ஆலோசனை கூட்டம் 23/11/2024 சனிக்கிழமை நாமக்கல், திருச்சி சாலை, நளா ஹோட்டலில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் மாணிக்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில மூத்த துணை தலைவர் பெரியசாமி, மாநில இணை செயலாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  1. புதிய பேருந்து நிலையத்திலிருந்து வரும் பேருந்துகள், பேருந்து நிலையத்திற்குள் வராமல், போக்குவரத்து நெரிசல் மிக்க மெயின் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. எனவே அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.
  2. பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்லாத காரணத்தால், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும், வணிக நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். அதை உடனே தடுத்த நிறுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  3. சேலத்தில் இருந்து வரும் பேருந்துகள் 7 கிலோமீட்டர் முன்னதாக முதலைப்பட்டியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடுவதால், பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும்.
  4. ⁠வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் ஐயத்தை போக்கிடும் வகையில், தற்போது உள்ள பழைய பேருந்து நிலையம் நகர பேருந்து நிலையமாக நிரந்தரமாக செயல்படும் என்கிற உறுதியை மாவட்ட நிர்வாகம் அளிக்க வேண்டும்.
  5. ⁠பழைய பேருந்து நிலையத்திற்கும் புதிய பேருந்து நிலையத்திற்கும் இடைய கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மருந்து வணிகர்கள் சங்கத்தினர் தங்களது மருந்து கடைகளை வருகிற 25ம் தேதி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும், பிற வணிக நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும் உறுதியளித்து பேரமைப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர். கூட்டத்தில் நாமக்கல் நகருக்கு உட்பட்ட 25 இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார் நன்றி கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!