Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்ராசிபுரத்தில் 20 பெண்களுக்கு சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி தொடக்கம்

ராசிபுரத்தில் 20 பெண்களுக்கு சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி தொடக்கம்

மத்திய சணல் வாரியத்துடன் இணைந்த சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் (சிப்போ) பெண்களுக்கான சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாம் தொடக்க விழா ராசிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிறு தொழில் முனைவோர்களை ஊக்கவிக்கும் நோகத்துடன் மதுரை சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு தொழில் பயிற்சிகளை அளித்து வருகிறது. சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தைப்படுத்துதல் பயிற்சி, விழிப்புணர்வு பயிற்சி முகாம்கள், தயாரிப்பு பொருட்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தல் போன்றவற்றை செய்து வருகிறது. இந்நிலையில் ராசிபுரத்தில் சணல்பொருட்கள் தயாரிப்பு அடிப்படை பயிற்சி 14 நாட்கள், உயர்நிலை பயிற்சி 7 நாட்கள் என மொத்தம் 21 நாள் பயிற்சியினை நடத்துகிறது. இதில் 20 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான பயிற்சி தொடக்க விழா ராசிபுரம் முத்தமிழ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் வி.சகுந்தலா தலைமை வகித்தார். சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (சிப்போ) பொது மேலாளர் கே.பழனிவேல் முருகன் முன்னிலை வகித்தார். பயிற்சி முடிவில் சான்றிதழ்களும், பயிற்சி முடித்த பெண்களுக்கு கைவினை கலைஞர்கள் அடையாள அட்டை, தொழில் கடன் பெறுவதற்கான வழிமுறைகள், சந்தைப்படுத்துதல் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும். பயிற்சி முகாம் தொடக்க விழாவில் ராகவேந்திரா பயிற்சி மையத்தின் ரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!