வணிகர்கள் சங்கம் சார்பில் நவம்பர் 25ல் நாமக்கல்லில் நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட வணிகர்கள் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது இதுகுறித்து பேரவையின் மாநில துணைத்தலைவர் கே.வாசு சீனிவாசன், மாவட்ட அமைப்பாளர் என்.சுப்பிரமணி ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து பஸ்களும் உள்ளே வந்து செல்ல வேண்டும் என்ற நாமக்கல் பஸ் நிலைய கடை வணிகர் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது.
தேவையானது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஏற்கனவே பஸ் பயணிகள் பஸ் உள்ளே செல்லாமல் வெளியே இறக்கிவிட்டு மழையிலும் வெயிலிலும் குழந்தைகள் பெரியவர்கள் பெண்கள் ஆகியோர் துன்ப படும் பாட்டை கண்டு பத்தாம் தேதி அன்றே நிர்வாகத்தை கேட்டு கோரிக்கை முன்வைத்தது.
அத்துடன் பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் யாவரும் பஸ் பயணிகள் வராத காரணத்தினால் கடை திறந்தும் வியாபாரம் செய்ய இயலவில்லை ஆனால் மாநகராட்சி கடைக்கு வாடகை கணக்கீடு செய்கிறார்கள்.
அதனால் திருச்சி ரோடு துறையூர் ரோடு , மோகனூர் ரோடு மார்க்கம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் உள்ளே வந்து வெளியே செல்ல வேண்டும்.
என்ற கோரிக்கைக்கு 25 ஆம் தேதி கடையடைப்புக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறது.