நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள நெ.3 கொமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் க.வை.ராமகிருஷ்ணன். வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஒய்வு பெற்ற இவருக்கு தற்போது 90 வயது. இதுவரை பிறந்த தினம் கொண்டாடாத இவர், தனது குடும்பத்தினர் வற்புறுத்தலால், தனது பிறந்த தினத்தை கேக் வெட்டிக்கொண்டாடினர். மேலும் விழாவிற்கு வந்திருந்உறவினர்களுக்கு திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதி சுவாமி பித்தளை சிலையும் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் பரிசளித்து ஆசிர்வாதம் செய்து வாழ்த்துக்கூறினார். மேலும் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் அவர்களுடன் இளமைக்கால பழைய நினைவுகள், அனுபவங்களை எடுத்துக்கூறி ஆனந்த கண்ணீருடன் வழியனுப்பி வைத்தார்.