Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாதேஸ்வரன் திடீர் ஆய்வு

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாதேஸ்வரன் திடீர் ஆய்வு

நாமக்கல் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினா் V.S.மாதேஸ்வரன் 1 நாமக்கல் கால்நடை மருத்துவமனையை ஆய்வு

நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் V.S. மாதேஸ்வரன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் கால்நடை மருத்துவக் கல்லூாி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் முனைவா் ம.செல்வராஜீ , மருத்துவனையின் பேராசிாியா் மற்றும் தலைவா் முனைவா் ச.தா்மசீலன், இதர துறை பேராசிாியா்கள் ச.கதிா்வேல், கு.பொன்னுசாமி ம.பழனிச்சாமி உள்ளிட்ட மாணவா்கள் உடனிருந்தனா்.

பாராளுமன்ற உறுப்பினா் மருத்துவனைக்கு வந்திருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடினாா். அவர்களிடம் மருத்துவ‌மனை சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையை மேம்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்கி தேவையான உதவிகள் செய்வதாகவும் தொிவித்தாா்.
மேலும் இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன்,
மாவட்ட துணை செயலாளர் செந்தில்ராஜா, ஒன்றிய செயலாளர்கள் மோகனூர் தெற்கு சரவணன், மோகனூர் கிழக்கு சிவக்குமார், நாமக்கல் கிழக்கு சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!