காவிரி ஆற்றின் துணை ஆறாக விளங்கும் திரு மணி முத்தார திட்டத்தை செயல் வடிவம் கொடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நாமக்கல் எம்பி ம, V.S. மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் எம்.பி.யும், கொ.மா.தே.க. நிர்வாகியுமான V.S. மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரி ஆற்றின் துணை நதியாக விளங்கிவரும் திருமணிமுத்தாறு மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. காவிரி-திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம் நிறைவேற கொ.மா.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பல்வேறு முயற்சிகளை எடுத்து அந்தத் திட்டம் முழுமையாக வெற்றி பெற நாமக்கல், சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட உள்ளது சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் பவித்திரம் வரை சுமார் 132 கி.மீட்டர் நீளத்திற்கு திட்டமிடப்பட்டுகிறது. அது நிறைவேற்றப்பட்டால் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுவதோடு, சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள். மேலும் ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, தாத்தையங்கார்பேட்டை, ஆகிய பகுதிகள் நிரந்தரமாக பயன் பெறும். எனவே அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவிரி-திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்ற தன்னார்வலர்கள் காவிரி-திருமணிமுத்தாறு மீட்பு திட்டம் குழுவில் இனிய முன் வர வேண்டும். அதற்கு 8111001999 என்ற வாட்ஸ்-அப் என்னில் முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஒரு சில மாதங்களில் தன்னார்வலர்களின் விவரங்கள் முழுமையாக பெறப்பட்டு கூட்டம் நடத்தப்படும்.