நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் தனியார் நிதி நிறுவனத்தின் பெயரில் கடன் தருவாதக்கூறி பல லட்சம் மோசடி செய்துள்ளதாக மகளிர் சுய உதவிக்குழுவினர் வேதனை தெரிவித்துள்ளனர். மகளிர் குழுவில் உள்ள 10 பேர் முதல் 15 பேர் வரை உள்ள மகளிருக்கு தலா ரூ.40 ஆயிரம் தீபாவளி பண்டிகைக்காக பணம் தருவதாக ஆசிவார்த்தை கூறி,
இதற்கு ஆவணத் தொகையாக தலா ரூ.250 செலுத்தியுள்ளனர். மகளிர் பலரும் தீபாவளி செலவிற்கு பயன்படும் என தற்போது இதனை செலுத்தி கடன் கிடைக்கும் என காத்திருந்தனர். ஆனால் செல் போன் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். இது போல் போலி விளம்பரம் கொடுத்து ஏராளமானோர் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. எனவே மேற்கொண்டு பெண்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.