Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்நாமக்கல் கண்ணாடி கடை உரிமையாளர்கள் சங்கத்தின் வெள்ளி விழா

நாமக்கல் கண்ணாடி கடை உரிமையாளர்கள் சங்கத்தின் வெள்ளி விழா

நாமக்கல் கண்ணாடி கடை உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் வெள்ளி விழா நாமக்கல் பசுமை பேம்லி ரெஸ்டாரெண்ட் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் முன்னாள் தலைவர் மல்லுசாமி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் தாண்டராயன், கௌரவத்தலைவர் பூபதி, சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் துணை தலைவர் சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் வெள்ளி விழா ஏற்புரை நிகழ்த்தினார்.

விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், நாமக்கல் லாரி பாடி பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் தங்கவேல் மற்றும் நாமக்கல் சிறு குறு தொழில் முனைவோர் சங்கத்தின் செயலாளர் சண்முகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

விழாவில் பேரமைப்பின் செயல்பாடுகள் குறித்து பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், வணிகர்கள் ஒற்றுமை உணர்வோடு செயல்பட்டு சங்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், அனைத்து வணிகர்களும் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இணைந்து அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று பயன் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

விழாவில் முன்னாள் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து, பொற்கிழி வழங்கி கௌரவிக்கப்பட்டது. சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வெள்ளி விழா நினைவு பரிசு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், இணை செயலாளர் தேவி உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன், இணை செயலாளர் எவரெஸ்ட் ராஜா, இணை அமைப்பாளர் மார்க்கெட் சிவக்குமார், நகர செல்போன் சங்க தலைவர் ரிஸ்வான் மற்றும் சேலம், திருச்செங்கோடு, சங்ககிரி கண்ணாடி கடை உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவை சங்கத்தின் ஆலோசகர் ஒசீர் அகமத் தொகுத்து வழங்கினார். சங்கத்தின் செயலாளர் மாதேஸ்வரன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் பொருளாளர் ரமேஷ் மற்றும் துணைச் செயலாளர் ஆனந்தகுமார் தலைமையில் செயற்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!