Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeதகவல்கள்ராசிபுரம் புறநகர் பேருந்து நிலையம் ரூ.10.58 கோடி மதிப்பில் அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் அனுமதி

ராசிபுரம் புறநகர் பேருந்து நிலையம் ரூ.10.58 கோடி மதிப்பில் அமைக்க நகர்மன்ற கூட்டத்தில் அனுமதி

ராசிபுரம் நகருக்கான புதிய புறநகர் பேருந்து நிலையம் ரூ.10.58 கோடி மதிப்பில் அமைக்கும் திட்டத்திற்கு நகர்மன்ற கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் நகரமன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் சூ.கணேசன், நகர்மன்ற துணைத் தலைவர் கோமதி ஆனந்தன், நகராட்சி உதவி பொறியாளர் ரவி, மேலாளர் ராமச்சந்திரன், நகரமைப்பு அலுவலர் ராஜேந்திரன், துப்புரவு அலுவலர் மு.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

நகராட்சியை ஒட்டி அமைந்துள்ள கிராம ஊராட்சிகளான அணைப்பாளையம், சந்திரசேகரபுரம், கவுண்டம்பாளையம், முத்துகாளிப்பட்டி, கோனேரிப்பட்டி
முருங்கப்பட்டி ஆகியவற்றை நகராட்சியுடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்டிட அனுமதி கோரி பெறப்படும் விண்ணப்பங்களுக்கு கட்டிட உரிமையாளரின் சுயசான்றின் அடிப்படையில் 2500 சதுரடி வரை பரப்பளவுள்ள மனையில் 3500 சதுரடி பரப்பளவு வரையிலான 2 குடியிருப்புகளுக்கு தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் குடியிருப்பு கட்டிடங்கள் கட்ட இணையவழி கட்டட அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. அணைப்பாளையம் பகுதியில் நகராட்சி ஆணையாளர் பெயரில் உள்ள 7.03 ஏக்கர் இடத்தில் ராசிபுரம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு அரசுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து முன்மொழிவு அனுப்பப்பட்டது. இதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2024-25 திட்டத்தின் கீழ் ராசிபுரம் நகராட்சியில் புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணிக்கு ரூ. 10.58 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே அணைப்பாளையம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நகரில் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. நகர்மன்ற உறுப்பினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையம், ராசிபுரம் புற நகர் பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் அமைக்கவும், கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கவும் நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!