Monday, December 23, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeநடப்புகள்நாமக்கல் : ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றத்தை கைவிடக் கோரியும் இதற்காக மின்னணு ஏலம் நடைபெறுவதை...

நாமக்கல் : ராசிபுரம் பேருந்து நிலையம் மாற்றத்தை கைவிடக் கோரியும் இதற்காக மின்னணு ஏலம் நடைபெறுவதை நிறுத்த கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ராசிபுரம் நகராட்சி பேருந்து நிலையம் இடமாற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்சியினர், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வது தொடர்பாக அண்மையில் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கென தனியாரிடம் 7 ஏக்கம் நிலம் தானமாகப் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலையம் மாற்றியமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அணைப்பாளையம் பகுதிக்கு பஸ் நிலையம் கொண்டு செல்வதை வணிகரகள், அரசியல் கட்சியினர், நகர் நல அமைப்பினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே சசிகலா ஆதரவு அணி சார்பில் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் என்.கோபால் தலைமையில் பலர் ஆட்சியரை கூட்ட அரங்கில் சந்தித்து மனு அளித்தனர். மேலும் பேருந்து நிலைய மின்னணு ஏலம் நடைபெறுவதையும் நிறுத்த வேண்டும் என்றும் மனு கொடுக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!