நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என புகார் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை பத்து ரூபாய் இயக்கம் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் பத்து ரூயாப் இயக்கம் சார்பாகவும், சமூக ஆர்வலர்களின் சார்பாகவும், பொதுமக்களின் சார்பாகவும் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. கொடுக்கப்படும் மனுக்கள் அப்படியே கிடப்பில் போட்டு வைத்துள்ளனர். இந்த மனுக்களுக்கு மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கேட்டு பத்து ரூபாய் இயக்கம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.
இதற்கு மனுநீதி கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பத்து ரூபாய் இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட மாநகர செயலாளர் எம்.சுப்பிரமணி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார், வாழ்நாள் துணை பொதுச்செயலாளர் டெஸ்மா வீரபாண்டியன், மாநில துணைப் பொதுச் செயலாளர் கே. சீனிவாசன் முன்னிலையில் நடைப்பெற்றது, இதில் பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜூ பங்கேற்று கோரிக்கை வலியுறுத்தி முழக்கமிட்டுப் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்குமார்,மாவட்ட செயலாளர்கள் பாலு , பாலசுப்பிரமணி, பழனிச்சாமி, கதிர்வேலு, மாநகர் அமைப்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட விவசாய அணி செயலாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர்கள் மகேஸ்வரி, பழனிவேலு, நகர செயலாளர்கள் பழனிச்சாமி, கணேசன், ஒன்றிய செயலாளர்கள் லோகநாதன், தேவதாசன், வெங்கடாசலம், முத்துகிருஷ்ணன் பிரகாஷ், செல்வகுமார், ஸ்ரீதர், மற்றும் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் ரேவதி மற்றும் பத்து ரூபாய் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். சமூக நீதி அனைத்து ஓட்டுநர் சங்க மாநில பொதுச்செயலாளரும் பத்து ரூபாய் இயக்கத்தின் ஆலோசகர் பத்மராஜ் நன்றி கூறினார்.