ராசிபுரம் வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கத்தின் சார்பாக வள்ளலார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .
இதன் முதல் நிகழ்வாக கொடியேற்றுதல், ஜோதி தரிசனம் நிகழ்வு நடை பெற்றது.
இதில் வள்ளலார் சுத்த சன்மார்க்க சபையின் தலைவர் நடேசன் தலைமை வகித்தார். நாமக்கல்மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் முனைவர் கை. பெரியசாமி, அகவல் பாராயணம், வள்ளலாரும் வாழ்வியலும் என்ற தலைப்பில் ஜீவகாருண்யம், தயவு, கருணை, பசித்தவருக்கு உணவளித்தல், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன், சத்திய ஞான சபை, தர்மசாலை அமைவிடம், மனுமுறை கண்ட வாசகம்
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ராசிபுரம் தமிழ் கழகத்தின் தலைவர் முனைவர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். அருட்பிரகாச வள்ளலார் அன்பர்கள் பங்கேற்று ஜோதி தரிசனத்தை வழிபாடு செய்தனர்.