ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் ஊட்டச்சத்து மாத நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது. இக்கல்லூரி சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, மாணவ மாணவியர்களிடையே பல்வேறு விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. செப்.24 முதல் செப்.26 வரை கல்லூரியில் ஒவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, நடனப்போட்டி, வினாடிவினாப்போட்டி, அடுப்பில்லா சமையல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ்நாடு,புதுச்சேரி மாநில நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.சொக்கலிங்கம், குடிமக்கள் நுகர்வோர் அமைப்பின் மாவட்ட தொடர்பு அலுவலர் சி.ஆர்.ராஜேஸ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசுக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சி.நாகூர்செல்வம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஊட்டச்சத்து துறைத் தலைவர் சண்முகசுந்தரம், துறைப் பேராசிரியர்கள் மா.சோபனா, ம.காயத்ரி, டி.இந்துமதி ஆகியோர் விழாவினை துவக்கி வைத்தனர். மேலும் 2019-ம் ஆண்டு நுகர்வோர் சட்டம் குறித்துப் பேசினர். நுகர்வோருக்கு மொபைல் செயலி குறித்தும் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. நுகர்வோர் கவசம் என்ற நூல் வெளியிடப்பட்டது. பின்னர் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கல்லூரியில் ஊட்டச்சத்து மாத நிறைவு விழா
RELATED ARTICLES