Tuesday, December 24, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeதகவல்கள்சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை சார்பில் செப்.28, 29-ல் இலவச பொது மருத்துவ முகாம்

சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை சார்பில் செப்.28, 29-ல் இலவச பொது மருத்துவ முகாம்

சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் ராசிபுரத்தில் செப்.28, 29 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை சார்பில் மருத்துவமனை நிறுவனர் ராமசாமி உடையார் நினைவாக அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் உள்ள அவரது பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் பல் துறை சிறப்பு இலவச மருத்துவ முகாம் ஆண்டு தோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான முகாம் செப். 28-ல் தொடங்கி இரு நாட்கள் நடக்கிறது என முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முகாமில் பொது மருத்துவ அறுவை சிகிச்சை, நுரையீரல் மருத்துவம், குழந்தைகள் மருத்துவ முகாம், எலும்பு, மூட்டு மருத்துவம், இருதய பரிசோதனை, நரம்பியல், சிறு நீரகம், தோல், காது மூக்கு, தொண்டை, கண், பல், உள்ளிட்ட பல்வேறு பொது நல மருத்துவம், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் நவீன பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படும். இருதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இசிஜி., எக்கோ பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் கண்பரிசோதனை செய்யப்பட்டு கண் கண்ணாடிகளும், பல் மருத்துவத்துறை சார்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவைப்படுவோருக்கு பல் செட் பொருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த மருத்துவ முகாமில் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வேந்தர் ஆர்.வெங்கடாசலம் பங்கேற்று குத்துவிளக்கேற்றுகிறார். மருத்துவக்கல்லூரி துணை வேந்தர் உமாசேகர் முகாமினை தொடங்கி வைக்கிறார். துணை மருத்துவக் கண்காணிப்பாளர் மோகன்செளத்ரி, பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் எச்.தமிழ்செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். மருத்துவக் கல்லூரி டீன், டாக்டர் கே.பாலாஜிசிங், தலைமையில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் இருதய பிரிவு மருத்துவர் டாக்டர் பி.வினோத்குமார், பொதுமருத்துவர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன், மகப்பேறு மருத்துவர் ஷீலா கே.பிள்ளை, குழந்தைகள் மருத்துவர் வி.வில்வநாதன், முடநீக்கியல் மருத்துவர் எஸ்.சுந்தர், சரும நோய் மருத்துவர் ஆர்.தரணி, நரம்பியல் மருத்துவர் ரித்விக் ரமேஷ், சிறுநீரக மருத்துவர் இ.ராம்பிரசாத், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் எஸ்.பிரசன்னகுமார், கதிரியக்கவியல் மருத்துவர் பி.உமாசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று முகாமில் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

இதில் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் சென்னை அழைத்து செல்லப்படுவர். முகாமில் கலந்து கொள்ள விருப்ப முள்ளவர்கள் திருமண மண்டபத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம் என முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் பி.சி.செங்குட்டுவன், கே.விஜயராகவன், ஜெ.முரளி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!