ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து ராசிபுரம் தீயணைப்பு துறையினர் சார்பில் செயல் விளக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ராசிபுரம் தீயணைப்புத்துறை நிலை அலுவலர் பலகார ராமசாமி தலைமையில் தீயணைப்பு நிலையக் குழுவினர் கலந்துகொண்டு எதிர் வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் இயற்கை சீற்றம்,புயல்,வெள்ளம் ,இடி,மின்னல் மழை போன்றவற்றிலிருந்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்வது, தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு செய்தனர்.
மேலும் நீர்நிலைகளான கிணறு, ஏரி,குளம் போன்றவற்றில் தவறி விழுந்தாலோ,ஆற்றில் அடித்துச் சொல்லப்பட்டாலோ எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் வீடுகளில் எரிவாயு,மின்சாரம் மூலம் தீப்பற்றினாலோ எவ்வாறு அணைப்பது என்பது குறித்தும் பொதுமக்கள், வருவாய்த்துறையினருக்கு செயல் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியின் போது ராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றன்.