Wednesday, January 15, 2025
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeதகவல்கள்தமிழக அரசு இணைந்து நடத்தும் இளைஞர்களுக்கான தொழில் முனைவு குறித்த ஒராண்டு படிப்பு

தமிழக அரசு இணைந்து நடத்தும் இளைஞர்களுக்கான தொழில் முனைவு குறித்த ஒராண்டு படிப்பு

தமிழக அரசு இணைந்து நடத்தும் இளைஞர்களுக்கான தொழில் முனைவு குறித்த ஒராண்டு படிப்புக்கு இளைஞர்களா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச.உமா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத்தில் உள்ள Entrepreneurship Development and Innovation Institute அகமதாபாத்துடன் இணைந்து“ தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம்“ என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளது. Entrepreneurship Development and Innovation Institute (EDII) நிறுவனம் இதற்கான பாடத்திட்டத்தை தீர்மானிக்கும், பாடத்தின் ஒரு பகுதி அவர்களின் பேராசிரியர்களால் நேரடியாக நடத்தப்படும். இதற்கான வகுப்புகள் வரும் அக்டோபர் 14, 2024 அன்று தொடங்கும். இதற்கான நேர்காணல்கள் செப்டம்பர் 2024 கடைசி வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளன.

இப்பயிற்சியில் விண்ணப்பிக்க வயது 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளம் பட்டதாரிகள் சேர்ந்து பயன்பெறலாம். இந்த பாடநெறி ஒரு தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்பாகும். வேலைவாய்ப்புக்கான படிப்பு அல்ல. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்முனைவோராக மாற முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். பயிற்சி முழுவதும் சென்னை Entrepreneurship Development and Innovation Institute -ல் உயர் தரத்துடன் கூடிய வகுப்பறையில் நடத்தப்படும். விருப்பமுள்ள நபர்கள்/ தொழில் முனைவோர் விண்ணப்பங்களை www.editn.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
மேலும் இப்பயிற்சிக்கான கட்டணமாக ரூ.80 ஆயிரம் என அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்ததை இரண்டு தவணைகளாக பிரித்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணங்களை செலுத்தலாம்.

மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.வாசுதேவன் அவர்களை 9952371533, 8668101638 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். அனைத்து விவரங்களையும் இந்த https://youtube.com/shorts/GBnEEtTQiuI?feature=share இணைய தளத்தில் காணலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!