தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்செங்கோடு கிளையின் தீரன் தொழிற்சங்கப் பேரவையின் கூட்டம் மற்றம் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா திருச்செங்கோடு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தொழிற் சங்கப் பேரவையின் மாநில செயலாளர் கொங்குகோமகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மண்டலத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கிட வேண்டும். சேலம் மண்டலத்தில் அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வார ஓய்வு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அனைத்து பேருந்துகளிலும் இருக்கக்கூடிய ஜாக்கி,ஸ்பேனர் போன்ற பொருட்களை ஏற்றி இறக்குவதில் ஓட்டுநர்கள் மிகவும் சிரமப்படும் காரணத்தினால் பேருந்துலேயே இருக்கும் வகையில் ஒரு பெட்டி அமைக்க வேண்டும் எனபன போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட திருச்செங்கோடு கிளை தீரன் தொழிற்சங்கப் பேரவையின் தலைவராக கே.பாலசுப்பிரமணி, செயலாளராக எம்.தினேஸ்குமார், பொருளாளர் பி.ரவிக்குமார், துணைத் தலைவர்களாக எம்.செந்தில்குமார், வி.மகேந்திரன், துணைச்செயலாளராகப் கே.சந்திரமோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு தொழிற் சங்கப் பேரவையின் மாநில செயலாளர் கொங்குகோமகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாநில துணைச்செயலர் ஆர்.சாம்ராஜ் மூர்த்தி, மாநில துணைத் தலைவர் கே.அழகேசன், மண்டலச் செயலர் இ.கே.கோபிநாத், மண்டலப் பொருளாளர் பி.கேசவன், மண்டல துணைத் தலைவர் டி.விஜயமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.