நாமக்கல் மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியசன் (MMA) சார்பாக நடைபெற்ற கிராமபுறங்களில் தொழில் நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகள் தொடர்பான கருத்தரங்கு நாமக்கல் – திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற்றது. இதில்
ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவன முதன்மை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு பங்கேற்று சிறப்புரை ஆற்றி கலந்துரையாடினார். நாமக்கல்
மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேசன் தலைவர் கே.வி. கணேசன் வரவேற்றுப் பேசினார்.
இணை சேர்மன்கள் சேதுராமன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் சிபி.ஆனந்த் அறிமுக உரையாற்றினார். விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற ஸ்ரீதர் வேம்பு பேசுகையில் ….
இன்றைய கிராம புறங்களில் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் தன்னம்பிக்கை , தன்னார்வம் , தன்னொழுக்கம் இவைகளை வளர்த்து கொண்டு அறம் சார்ந்த வாழ்வியலை மேற்கொள்ள வேண்டும் எனவும், தாங்கள் படிக்கின்ற பகுதிகளில் உள்ள தொழில்கள் பற்றி தொழில் நுட்ப வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக நாமே உற்பத்தி செய்ய வேண்டும் அதற்கான முயற்சியில் முனைப்புடன் ஈடுபட வேண்டும், கல்வி ஆய்வு என்பது தியானமாக நாம் செய்யும் தொழிலே தெய்வமாக எண்ணி செயல்பட வேண்டும். நமது கலாச்சாரம் பண்பாட்டை காக்க வேண்டும் இயற்கையின் கொடையாக இருக்கும் குளங்களை , ஏரிகளை, மலைகளை புனிதமாக எண்ணி பாதுகாக்க வேண்டும் நகரங்களை நோக்கி வேலைக்காக செல்ல செல்ல நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாகி வருகிறது. நாம் இருகின்ற இடத்தில் பணி செய்ய நல்ல வாய்ப்புகள் கிராம புறங்களில் உள்ளன அதற்கான தொழில் நுட்ப அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் நமது பெற்றோர்களை உறவுகளை காத்திடல் வேண்டும் என கேட்டுக் கொண்டார். விரைவில் நாமக்கல்லில் ஜோஹோ
நிறுவன மையம் அமைப்போம் என கூறினார். விழாவில் சிறப்பு விருந்தினருக்கு கே.கே.பி. நல்லதம்பி , தென்பாண்டியன் நல்லுசாமி , தங்கம் மருத்துவமனை மருத்துவர் குழந்தைவேல் , சனு வ.சத்திய மூர்த்தி ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர் . கருத்தரங்கில் ஞானமணி பொறியியல் கல்லூரி தலைவர் தி.அரங்கண்ணல், பாவை பொறியியல் கல்லூரி தலைவர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன் , டிரினிடி மகளிர் கல்லூரி செயலர் செல்வராஜ் , செயல் இயக்குனர் அருணா , கொங்கு நாடு பொறியில் கல்லூரி தலைவர் பெரியசாமி , காமராஜர் கல்வி நிறுவன தலைவர் கணேசன் , நாமக்கல் மாவட்ட வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் த.ஜெயக்குமார் வெள்ளையன் உள்ளிட்ட கல்லூரி மாணவ மாணவிகள், தொழில் முனைவோர்கள் , விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் கதிரவன் நன்றி கூறினார். கருத்தரங்கை பசுமை மா.தில்லை சிவக்குமார் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.