ராசிபுரம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ராசிபுரம் அடுத்த முத்துகாளிப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் நடேசன் (62). இவர் மீது கடந்த 1997-ம் ஆண்டு முதல் கலால் குற்றம் தொடர்பான வழக்கு ராசிபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு நடேசன் நீண்ட காலமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் ராசிபுரம் உதவி சார்பு நீதிமன்ற நீதிபதி பிலிப், நடேசனை அக்.16-ம் தேதிக்குள் ராசிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என ராசிபுரம் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் நடேசன் தலைமறைாவாக உள்ளதால், இதற்கான உத்தரவின் நகலை முத்துக்காளிப்பட்டியில் உள்ள நடேசனின் வீட்டில் காவல்துறையினரால் ஒட்டப்பட்டது. மேலும் ராசிபுரம் பஸ்நிலையம், காவல் நிலையம், நீதி மன்றம் போன்ற பொது இடங்களில் ராசிபுரம் காவல்துறையினர் ஒட்டிவைத்து நடேசனை தேடிவருகின்றனர்.