ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் செளரிபாளையம் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சுண்டக்கா ராஜி (60) என்ற கூலித்தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வெண்ணந்தூர் அருகேயுள்ள சௌரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுமிகளை அழைத்து சாக்லேட் வாங்கித் கொடுத்து அவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமிகள் இருவரும் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பெற்றோர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை விசாரித்த போலீஸார் முகாந்திரம் இருப்பது தெரியவந்ததையடுத்து கூலித்தொழிலாளியை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். பெண்களை பெற்ற குறிப்பாக வேலைக்கு செல்லும் கிராமப்புறப்பகுதிகளில் பெற்றோர் இது போன்ற கயவர்களிடம் உஷாராக இருக்க வேண்டிய தருணம் இது.