Saturday, January 17, 2026
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeஆன்மிகம்ராசி இன்டர்நேஷனல் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

ராசி இன்டர்நேஷனல் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

ராசிபுரம் சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள ராசி இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியின் தாளாளர் S சத்தியமூர்த்தி தலைமை வகித்துஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ராதை-கண்ணன் குறித்தும் குழந்தைகளிடம் பேசினார். மேலும் கண்ணனுக்கு படையல் வைத்துப் பூஜைகள் செய்து ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.

விழாவில் திரளான மழலையர் வகுப்பு குழந்தைகள் ராதை கிருஷ்ணர் வேடங்களில் வந்திருந்து நடனமாடியும் பஜனைகள் பாடியும் விழாவில் மகிழ்ந்தனர். பள்ளியின் முதல்வர் D. வித்யாசாகர் அனைவரையும் வரவேற்று கிருஷ்ண ஜெயந்தி விழாவின் முக்கியத்துவம் பற்றி பேசினார். பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செல்வி மம்தா உள்ளிட்ட பள்ளியின் ஆசிரிய ஆசிரியைகள்
விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!