மத்திய அரசின் தேசிய வள அமைப்பான (National Resource organization) அகமதாபாத்தை சார்ந்த இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்(Entrepreneurship Development Institute of India – EDII), நாமக்கல் மாவட்டதில் தொழில்முனைவோராக விருப்பமுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதுக்கு உட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சியான சணல் பொருட்களிலிருந்து தயாரிக்க கூடிய லேப்டாப் பேக் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பது குறித்த தையல் பயிற்சி ஒரு மாத கால இலவச பயிற்சியாக ராசிபுரத்தில் அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் போன்றவைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 88258 12528 / 94432 76921 என்ற எண்ணிற்கு குறுந்செய்தி மூலம் தங்கள் பெயரினை முன்பதிவு செய்து தேவையான விவரங்களை பெற்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட அலுவலர் முனைவர் S. ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெண்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
RELATED ARTICLES