Tuesday, December 24, 2024
ADVERTISEMENT
ADVERTISEMENT
Homeகல்விச்சோலைபாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் அவர்களுக்கு கல்வி புரட்சியாளர் விருது

பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் அவர்களுக்கு கல்வி புரட்சியாளர் விருது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் அவர்களுக்கு கல்வியில் பல மாற்றங்கள், முன்னேற்றங்கள் போன்றவற்றின் செயல்பாடுகளுக்காக ICT ACADEMY (தமிழ்நாடு) சார்பில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தி.பழனிவேல் தியாகராஜன் கல்வி புரட்சியாளர் என்ற விருது வழங்கி கெளரவித்துப் பாராட்டினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள புதுசத்திரம் பகுதியில் பாவை வரம் அறக்கட்டளையின் கீழ் பாவை கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரி, பாலிடெனிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, நர்சிங், பார்மசி கல்லூரி, அலைட் சயன்ஸ் கல்லூரி, ஐ.ஏ.எஸ். அகாதெமி, பாவை நிருத்யாலா நாட்டியப் பயிற்சிப் பள்ளி, பாவை வித்யாஸ்ரம் சிபிஎஸ்சி பள்ளி, பாவை மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ராசிபுரம் பகுதியில் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாவை வரம் கல்வி அறக்கட்டளையின் தலைவராக ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கைநடராஜன் ஆகியோர் அர்பணிப்பு உணர்வுடன் முழுநேரக் கல்விப்பணியாக செயல்பட்டு வந்த காரணத்தினால் தற்போது இக்கல்லூரி ஆலமரம் போல் விழுதுகள் விட்டு வளர்ந்து நிற்கிறது. இந்த அறக்கட்டளையை நடத்தி வரும் இவர்கள் மாணவர்கள் இங்கு படிக்கும் காலத்தில் பாடத்திட்டத்தை மட்டும் சொல்லிக்கொடுத்து மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொள்வதில்லை. அதனையும் தாண்டி கலாச்சாரத்தை அறிந்தவர்களாக, பாரம்பரியத்தை புரிந்தவர்களாக சமூக, சமுதாய அக்கரை கொண்டவர்களாக , எதிர்காலத்தில் சவால்களை சந்திக்கும் திறன் பெற்றவர்களாக மாணவர்களை உருவாக்கிட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு அர்பணிப்புடன் முழுநேரப்பணியாக செயல்பட்டு வருகின்றனர்.

இங்கு பயிலும் மாணவர்களை சிற்பம் உருவாக்குவது போல் பார்த்து செதுக்கி செதுக்கி அவர்களுக்கு வாழ்க்கை கல்வியையும், சமுதாயத்தில் சந்திக்க வேண்டிய சவால்கள் குறித்த திறன்களையும் வளர்த்து மேம்படுத்தி கல்வி நிறுவனத்தில் இருந்து உருவாக்கி அனுப்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாணவர்களை இவர்களே நேரிடையாக சந்தித்து திறன் வளர்ப்பையும், உற்சாகத்தையும், ஊக்குவிப்பையும் கொடுத்துவருகின்றனர் என்றால் மிகையல்ல. இப்பகுதியில் பரந்து விரிந்து பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர் பயிலும் இக்கல்வி நிறுவனம் மேலும் பலசாதனை புரிந்து இப்பகுதியில் நிர்வாகத்திறனுடன் மாணவச் சமுதாய வளர்ச்சிக்கு மட்டுமின்றி, சமுதாய வளர்ச்சிக்கும் செயலாற்றும். ஏற்கனவே பல விருதுகள் பெற்றுள்ள இக்கல்வி நிறுவனம் தற்போது தற்போது மீண்டும் ஒரு விருதினை பெற்று பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.

ஐசிடி அகாதெமி விருது வழங்கி பாராட்டு:

இக்கல்வி நிறுவனத்தின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், ஐசிடி அகாதெமியின் எஜூகேசன் சேன்ஞ் மேக்கர் என்ற கல்வி புரட்சியாளர் விருதினை பெற்றுள்ளார். கல்வி நிறுவனத்திற்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் பாலமாக இருந்து கல்வி,தொழில் வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் ICT ACADEMY BRIDGE-24 என்ற தலைப்பில் கல்வி வளர்ச்சி – தொழில் வளர்ச்சி குறித்த கருத்தரங்கினை ஆக.20-ல் கோவையில் நடத்தியது. இந்த கருத்தரங்கில் கல்வித்துறையில் உள்ள புதிய கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பங்கள், எதிர்கால வளர்ச்சி போன்றவை குறித்தும் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்களின் உயர் அதிகாரிகளால் கலந்துரையாடப்பட்டது. கல்வியில் சிறந்த மாற்றம் மற்றும் புதுமைகளை உருவாக்குபவர்களை மதிப்பீடு செய்து, அவர்களுக்கு விருதினை வழங்கி கெளரவித்தது.

இவ்விழாவில் சிறந்த கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜனுக்கு EDUCATION CHANGE MAKER என்ற கல்வி புரட்சியாளர் விருது வழங்கப்பட்டது. இதனை விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தி.பழனிவேல் தியாகராஜன், ஆடிட்டர் என்.வி.நடராஜனுக்கு வழங்கி கெளரவித்தார். கல்வியில் புதிய மாற்றங்களை உருவாக்குபவர்களின் பணியினை பெருமைப் படுத்தும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற பாவைக் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் கூறுகையில், ஐசிடி அகாதெமி வழங்கிய இந்த விருதால் பாவை கல்வி நிறுவனம் பெருமை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல், சமூகத்தில் மேலும் பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுத்த முயல்வோரை ஊக்கப்படுத்துவதாக இருக்கும் என்றார். விருது பெற்ற ஆடிட்டர் என்.வி.நடராஜனுக்கு பாவைக் கல்வி நிறுவனத்தின் தாளாளர் மங்கைநடராஜன், இயக்குனர்கள், முதல்வர்கள், முதன்மையர்கள், பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
error: Content is protected !!