மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் டாப் 10 இடங்களில் நாமக்கல் கிரீன் பார்க் பயிற்சி மையத்தின் மாணவர்கள் 5 பேர் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
நாமக்கல் கிரீன்பார்க் மேல்நிலைப்பள்ளி மற்றும் பயிற்சி மையத்தின் மாணவர்கள் பலர் நீட், ஜேஇஇ., தேர்வில் ஆண்டுதோறும் அகில இந்தி்ய அளவில் முதலிடம் மற்றும் சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்று வருகின்றனர். நாமக்கல் கிரீன்பார்க் நீட் தேர்வு பயிற்சி மையம் அகில இந்திய அளவில் மருத்துவ மாணவர்களை உருவாக்குவதில் புகழ்பெற்றுள்ளது. இப்பயிற்சி மையத்தின் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி பிற மாநில மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். நடப்பு ஆண்டு இப்பள்ளி மாணவர் பி.ரஜனீஸ் அகில இந்திய அளவில் 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள்: இந்நிலையில் தற்போது வெளியான எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இம்மையத்தின் மாணவர்கள் 5 பேர் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். தற்போது 2024-25-ம் ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கை தரவரிசை பட்டியல் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னையில் வெளியிட்டார். இதல் முதலிடத்தில் நாமக்கல் கிரீன் பார்க் மையத்தின் மாணவர் பி.ரஜனீஸ் (மதிப்பெண்-720) இடம் பெற்றார். மேலும் தரவரிசை பட்டியலில் 5-ம் இடத்தில் கிரீன் பார்க் மாணவி என்.ஜெயவதிபூர்வஜா (மதிப்பெண்-715), 6-ம் இடத்தில் ஆர்.ரோகித் (மதிப்பெண்-715), 7-ம் இடத்தில் எஸ்.சபரீசன் (மதிப்பெண்-715), 9-ம் இடத்தில் எம்.ஜே.விக்னேஸ் (மதிப்பெண்-715), ஆகியோர் இடம் பெற்று முதல் 10 இடத்தில் இம்மையத்தின் 5 பேர் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இம்மையத்தில் 720-க்கு 700 மதிப்பெண்களுக்கு மேல் 32 மாணவர்கள் பெற்று சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மையத்தில் பயின்று சாதனை பிரிந்து மாணவர்களை கிரீன்பார்க் பயிற்சி மையத்தின் தலைவர் எஸ்.பி.என்.சரவணன் உள்ளிட்ட இயக்குனர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டுத்தெரிவித்தனர். இந்த சாதனைக்கு பயிற்சியாளர்களின் அயராத உழைப்பும், அதற்கேற்ற மாணவர்களின் ஒத்துழைப்புமே காரணம் என்றார் பள்ளியின் தலைவர் கிரீன்பார்க் எஸ்.பி.என்.சரவணன்.